Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

இந்த வாரம் இரத்த நிலவு!


எதிர்வரும் 07ஆம் திகதிகளில் வானில் அரிய வகை முழு சந்திர கிரணம் தென்படவுள்ளது.

 

இரத்த நிலவு (Blood Noon) என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்.

 

இது 82 நிமிடங்கள் வரை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பூமியின் நிழல் சந்திரனை முழுவதுமாக மறைப்பதால் இந்த அரிய நிகழ்வு நிகழ்கிறது.

 

சூரிய ஒளி வளிமண்டலத்தின் வழியாக வடிந்து, அதற்கு ஒரு சிவப்பு நிற ஒளியைக் கொடுக்கும்.

 

இது 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக நீண்ட முழு சந்திர கிரகணம் ஆகும்.

 

மேலும் இந்த காட்சியை உலக மக்கள்தொகையில் சுமார் 85 சதவீதத்தினர் அவதானிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்துடன் ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தெளிவாக அவதானிக்க முடியும்.


@CM

Tags

ads