Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

மூளையின்றிப் பிறந்த பெண்ணுக்கு இன்று வயது 20: உயிர் பிழைத்த காரணத்தை கூறி நெகிழும் பெற்றோர்!


மூளையின் பெரும்பகுதி இல்லாமல் பிறந்த அமெரிக்கப் பெண் ஒருவர், மருத்துவர்களின் கணிப்பை முறியடித்து வெற்றிகரமாகத் தனது 20 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி, மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.


நெப்ராஸ்கா மாநிலத்தின் ஒமாஹாவைச் சேர்ந்த அலெக்ஸ் சிம்ப்சன் (Alex Simpson) என்ற இந்தப் பெண்மணி, 'ஹைட்ரான்எசெஃபாலி' (Hydranencephaly) எனப்படும் அரிய நரம்பியல் குறைபாட்டுடன் பிறந்தார்.


இந்த நோயால், மூளையின் பெரும்பகுதி அல்லது முழுமையான பெருமூளை அரைக்கோளங்கள் வளர்ச்சியடையாமல், அந்த இடம் முழுவதும் மூளைத் தண்டுவட திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும்.


இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகள் பொதுவாக ஓராண்டுக்குள் அல்லது அதிகபட்சம் 4 வயதுக்குள் உயிரிழந்துவிடுவார்கள் என்று மருத்துவர்கள் இவரது பெற்றோரிடம் தெரிவித்திருந்தனர்.


எனினும், அலெக்ஸ் சிம்ப்சன் கடந்த நவம்பர் 4ஆம் திகதி தனது 20 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி, மருத்துவ உலகிற்கு ஓர் அதிசயமாக மாறியுள்ளார்.


அலெக்ஸால் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியாது. இருப்பினும், தங்கள் மகளுக்கு இவ்வளவு நீண்ட ஆயுள் கிடைத்ததற்கான காரணம் குறித்துப் பேசிய அவரது பெற்றோர், "அன்புதான்" இதற்குக் காரணம் என்று நம்புவதாகக் கூறியுள்ளனர்.


அலெக்ஸின் 14 வயதுச் சகோதரர் பேசுகையில், "அலெக்ஸால் எங்களைச் சுற்றி இருக்கும் மன அழுத்தங்கள் அல்லது உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியும்.


மருத்துவர்களின் எதிர்பார்ப்புகளை அலெக்ஸ் முறியடித்துள்ளதற்குத் தங்கள் நம்பிக்கையும், மகளின் போராட்ட குணமுமே காரணம் என்று அவரது பெற்றோர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.


@CM

Tags

ads