Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூரைச் சேர்ந்த முகம்மது புஹாரி பாத்திமா அனிசுல் பfதூல் பாகிஸ்தானிலுள்ள உலகப்புகழ் வாய்ந்த லாகூர் அரசுக் கல்லூரி பல்கலைக்கழகத்தில் கணனி அறிவியல் துறையில் (Bachelor of Computer Science (Hons) சிறப்பு பட்டம் பெற்றார்!

 


நிந்தவூர் - 01,வன்னியார் வீதியைச் சேர்ந்த முகம்மது புஹாரி பாத்திமா அனிசுல் பBதூல் கணினி அறிவியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார்!


-ஏ.ஷபாத் அஹமட் -


பாகிஸ்தான் அரசு வருடாந்தம் இலங்கையிலுள்ள மாணவர்களுக்கு அல்லாமா இக்பால் புலமைப் பரிசில் திட்டத்தின்கீழ் கடந்த 2021 ம் வருடம் தகுதி (Merit) அடிப்படையில் கணினி அறிவியல் துறைக்கு அனிசுல் பத்தூல் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


பாகிஸ்தானிலுள்ள மிகவும் பாரம்பரிய மிக்கதும், உலகப்புகழ் வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான லாகூர் அரசுக் கல்லூரி பல்கலைக்கழகத்தில் கணனி அறிவியல் துறையில் தனது பட்டப் படிப்பை (Bachelor of Computer Science (Hons) உயர் சித்தியடைந்து நாட்டை வந்தடைந்தார்.


இவர் தனது கல்விப் பயணத்தில் பல கல்விசார் அனுபவங்களை பெறுக்கொண்டுள்ளார். உலக அளவில் மிகப் பிரபலமான தகவல் தொழினுட்ப நிறுவனமும், தொழினுட்ப நிறுவனங்களுக்கு என்டர்பிரைசஸ் மென்பொருளுக்கான தீர்வுகளை வழங்கிவரும் நிறுவனமான NetSol Technologies நிறுவனத்தில் பயிற்சி மென்பொருள் தரப் பரிசீலனை பொறியியலாளராக (Trainee software quality Assurance Engineer) இணைந்து தனது தொழிற் துறைக்கான அனுபவத்தையும் சிறந்த முறையில் பெறுக்கொண்டுள்ளார்.


இவரது இத்தகைய அனுபவமானது குறிப்பிட்ட துறையில் மேலும் மேலும் பெண் ஆளுமைகள் உருவாகும் தருணமாகப் பார்க்கப்படுகிறது.


அனிசுல் பாத்திமா பத்தூல் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும், பின்னர் தனது உயர்தரக் கல்வியை கல்முனை மஹ்மூத் பெண்கள் தேசிய பாடசாலையிலும் பயின்றார்.


இவர் பொறியியலாளரான காலஞ்சென்ற A. B. M. புஹாரி, சிஹாறா பஹ்மின் தம்பதியரின் புதல்வியும்,


காலஞ்சென்ற ஆசிரிய தம்பதிகளான யூ. எல். ஏ. ஹமீட், சுலைஹா ஆகியோரின் பேத்தியாரும், 


இலங்கையின் உச்ச நீதிமன்ற நீதியரசர் அல்ஹாஜ். திலீப் நவாஸ், மற்றும் டாக்டர். திலீப் மபாஸ் ஆகியோரின் மருமகளுமாவார்.


அனிசுல் பாத்திமா பத்தூல் தனது துறையில் மென்மேலும் தடம்பதித்து எதிர்காலத்தில் நமது சமுகத்தை மேம்படுத்தும் ஒரு பெண் ஆளுமையாக பிரகாசிக்க சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.  


@CM

Tags

ads