கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 7 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த வெளியேற்றத்திற்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மெததும்பர மற்றும் மினிப்பே ஆகிய பிரதேச செயலக மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும்,நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, மதுரட்ட, ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலக மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மூன்றாம் கட்டத்தின் கீழ் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகக் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் ஹசாலி ஹேமசிங்க குறிப்பிட்டார்.
@CM
