Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாளை முதல் பலத்த மழை - இலங்கையை சூழும் அலை வடிவக் காற்று : பேரிடர் மீட்புக் குழுக்கள் எந்நேரமும் களமிறங்கத் தயார்!


எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலையை எதிர்கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. 

 

நாளை (29) முதல் நிலவக்கூடிய அலை வடிவான காற்று காரணமாக மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

 

இதனைக் கருத்திற்கொண்டு, கடற்படை வீரர்கள், உலங்கு வானூர்திகள், மற்றும் படகுகளைத் தயார் நிலையில் வைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். 

 

எதிர்பார்க்கப்படும் இந்த வானிலை மாற்றத்தின் போது, வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையைக் காட்டிலும் சீரற்ற வானிலை நிலவக்கூடும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

 

அதன்படி ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அவதானம் செலுத்தி, அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads