தேசிய அணிக்குத் தகுதியான திறமை? வாய்ப்பு இருந்தும் மறுக்கப்பட்டது ஏனோ?
– Niksy Ahmed -
நிந்தவூர் / கொழும்பு
நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் தனது ஆரம்ப கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய அவர், 15 வயதுக்கு கீழ் நடைபெற்ற கடின பந்து போட்டிகளில் காட்டிய ஆட்டம் இன்னும் எமது நினைவை விட்டு போகவில்லை.
அலிகார் தேசிய பாடசாலைக்கு எதிரான ஒரு முக்கிய போட்டியில் Low Order-இல் களமிறங்கி தனது வேகமான ஓட்டங்களால் ஆட்டத்தின் நிலையை மாற்றியமைத்தது அவரது ஆட்ட வாழ்க்கையின் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அந்த ஆட்டம் அவரை பள்ளி மட்டத்தில் “மெட்ச் ஃபினிஷர்” என்ற நாமத்துக்கு வழு சேர்த்தது என்று சொல்லலாம்.
மேற்படிப்பிற்காக அவர் கொழும்பில் உள்ள Zahira College, Colombo இல் இணைந்த பின்னரும் அவரது ஆட்டத் திறன் குறையவில்லை. பாடசாலைகளுக்கு இடையிலான (inter school) போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, ஒரு பருவத்தில் அதிக ஓட்டங்கள் பெற்ற (1000 ஓட்டங்கள்) வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
அதனைத் தொடர்ந்து Zara Tournament போன்ற உள்ளூர் உயர்நிலை போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார். இந்த கட்டத்தில் தேசிய அணியை நோக்கிய முன்னேற்றம் அவருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது.
அதே காலகட்டத்தில் பள்ளி மட்டத்தில் விளையாடிய Kusal Mendis பின்னர் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து சர்வதேச மட்டத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் Niksy Ahmed தேசிய அணித் தேர்வில் இடம்பெறாதது குறித்து சில சந்தேகங்களும் எழாமலில்லை.
உண்மையாக இந்த தேர்வு புறக்கணிக்கப் பட்டமைக்கு “திறமை மட்டுமே போதுமானதல்ல காலம், வாய்ப்பு, அணியின் தேவைகள், தேர்வுக் கொள்கைகள் , செல்வாக்கு ஆகியவை முக்கியம்” என்பதுதான் அவசியம் என்பதை சுட்டிக் காட்டி நிற்கிறது.
இதேவேளை, Sri Lanka Cricket தேர்வு முறைகள் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதும் நினைவுகூரப்பட வேண்டும்.
Niksy Ahmed - இன்றும் பல்வேறு மட்டத்தில் விளையாட்டு ஆர்வலர்களிடையே ஒரு சிறந்த player க்கான வாய்ப்பு வழங்கப்படாதது பற்றி நினைவாகவும், ‘தேசிய அணிக்கு சென்றிருக்க வேண்டிய வீரர்’ என்ற கருத்தும் பேசப்பட்டு வருகின்றன.
கிரிக்கெட் விளையாட்டு உலகில் திறமை, முயற்சி, மற்றும் வாய்ப்பு – இந்த மூன்றின் இணைப்பே ஒரு வீரரை உச்சிக்குக் கொண்டு செல்கிறது. அந்த வாய்ப்பு தவறிய திறமைகளில் ஒருவராக Niksy Ahmed பெயர் என்றும் மாறாது.
ஆக்கமும்/தேடலும்
சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர்
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
AMJ
