சிடிசன் மீடியா ஊடக வலையமைப்பின் மூத்த ஊடகவியலாளர் சலீம் அவர்களை இழந்து நிற்கும் தருணம்!
சிடிசன் மீடியாவின் மூத்த ஊடகவியலாளர் சலீம் அவர்களின் மறைவு செய்தி எங்களை ஆழ்ந்த கவலையிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூரை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல மூத்த ஊடகவியலாளர், கலாபூஷணம் ஏ. எல்.எம். சலீம், ஊடகத் துறையில் நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னணி மூத்த ஊடகவியலாளராக திகழ்ந்தவர்.மற்றும் அவரது அனுபவத்தின் மூலம் எமது சிடிசன் மீடியாவை சிறந்த முறையில் வழிநடத்தியவர்.
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதித் தலைவராகப் பணியாற்றியதுடன், மாவட்ட மற்றும் கிழக்கிலங்கை மட்டங்களில் பல ஊடக அமைப்புகளை உருவாக்கி வளர்த்ததில் அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது.
மேலும், அம்பாறை மாவட்ட கரையோர செய்தியாளர் சங்கம், தென்கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் ஸ்தாபகராகவும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் உப தலைவராகவும் இருந்து ஊடகத் துறையின் வளர்ச்சிக்கு சிறப்பான சேவைகளை வழங்கியுள்ளார்.
அவரது பணிவும், நேர்மையும், இளம் ஊடகவியலாளர்களை வழிநடத்திய அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும்.
இவரது இழப்பினால் துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சிடிசன் ஊடக வலையமைப்பு சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!
ஆமீன்🤲...
