Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் அபாயம் – சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வேண்டுகோள்!


நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வரட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.


எனவே, நீரை வீணாக்குவதைத் தவிர்த்து, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் நீரைப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன், அளவுக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தினால், உயரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், குழாய் ஊடாக நீரைப் பெற்றுக் கொள்ளும் இறுதி முனையத்தில் உள்ள இடங்களுக்கும் செல்லும் நீரின் அழுத்தம் குறையக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாட்டில் வரட்சி நிலைமை மேலும் மோசமடைந்தால், எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


எனவே, தடையின்றி நீர் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்ல பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று நீர் வழங்கல் சபையின் தலைவர் சந்தன பண்டார வலியுறுத்தியுள்ளார்.


@CM 

Tags

ads