Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலய மாணவன் M.H.முஹம்மட் யூசூப் கணித ஒலிம்பியாட் போட்டியில் தேசிய மட்டத்திற்கு (National Level) தெரிவு!


நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலய மாணவன் M.H.முஹம்மட் யூசூப், இன்று மாகாண மட்ட போட்டியின் முடிவின் படி, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள கணித ஒலிம்பியாட் போட்டியில் தேசிய மட்டத்திற்கு (National Level) தெரிவு!


இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலய வரலாற்றில் தேசிய ரீதியில் (National level ) தெரிவு செய்யப்பட்ட முதலாவது மாணவனாக இடம் பிடித்ததோடு இந்த மாணவனின் சாதனை மூலம் இப்பாடசாலைக்கும் எமது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் M.H.முஹம்மட் யூசுப் அண்மையில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் (CAT1) போட்டிப் பரீட்சையில் பாடசாலை மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டம் போன்ற பரீட்சைகளில் திறமைச் சித்தியடைந்து, தற்போது தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இந்த மாணவன் சென்ற வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 159 பள்ளிகளைப் பெற்று சித்தியடைந்ததுடன், கணக்காளர் ஹாறூன் அவர்களின் மூத்த புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இம்மாணவனின் அபார திறமைக்கும், சாதனைக்கும் சிடிசன் மீடியா கல்விப் பிரிவு சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ads