Type Here to Get Search Results !
Developed by Cleverbit

விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!


2026 ஆம் ஆண்டுக்கான அரச விசாக பூரணை தினத்தை முன்னிட்டு மே மாதம் 31 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


அரச விசாக பூரணை உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, முன்னதாக மே மாதம் 2 ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, இந்த முறை விசாக பூரணை வாரம் மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


@CM

Tags

ads