Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பெரும் போக விவசாயிகளுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!


 நாட்டில் தற்போது பயிர்ச்செய்கைக்குத் தேவையான உரக் கையிருப்பு போதுமான அளவு இருப்பதாகவும், உரத் தட்டுப்பாடு குறித்து விவசாயிகள் வீணான அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.


மொரகொல்லாகம விவசாய சேவை மையத்திற்கு இன்று (11) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


வரவிருக்கும் பெரும் பருவத்திற்குத் தேவையான டிஎஸ்பி மற்றும் எம்ஓபி உரங்கள் போதுமான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.


கடந்த சிறுபோகத்தில் 13,000 மெற்றிக் டொன் எம்ஓபி உரம் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 38,000 மெற்றிக் டொன் கையிருப்பில் உள்ளது.


யூரியா உரத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், அண்மையில் 25,000 மெற்றிக் டொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.


இவை தற்போது நாடு முழுவதும் உள்ள விவசாய சேவை மையங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.


உலக சந்தையில் உர மூடை ஒன்றின் விலை 17,000 ரூபாவாக உயர்ந்துள்ள போதிலும், அரசாங்கம் அதனை விவசாயிகளுக்கு 10,200 ரூபா என்ற மானிய விலையில் வழங்கி வருகின்றது.


மேலும், விவசாயிகளுக்கான உர மானியம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இரண்டு ஹெக்டேயருக்கு 30,000 ரூபாவாக இருந்த மானியம், பின்னர் 50,000 ரூபாவாக உயர்த்தப்பட்டது.


இது தற்போதுள்ள நிர்வாகத்தின் கீழ் அது 60,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், விவசாய சமூகத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


@CM

Tags

ads