Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாளை முதல் வானிலையில் அதிரடி மாற்றம்; 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!


நாளை (20) முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், மத்திய, சபரகமுவ, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேல், மத்திய, சபரகமுவ, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும்.


மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.


இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


@CM

Tags

ads