நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வானிலை நிலவரத்தின் அடிப்படையில், 16 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 09 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
@CM
