இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது நாட்டைச் சூழவுள்ள வளிமண்டல தளம்பல் நிலை, நாளை திங்கட்கிழமை (11) அளவில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Low-pressure area) வளர்ச்சியடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது நிலவும் மழைக்கால வானிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வானிலை மாற்றங்கள் தென்மேற்கு பருவமழைக்கு முந்திய காலப்பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி அளவில் நாட்டில் பருவமழை நிலைமை முழுமையாக உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
@CM
