Type Here to Get Search Results !
Developed by Cleverbit

டொலர் பெறுமதி அதிகரிப்பு - இலங்கையில் வாகன விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்!


வாகன இறக்குமதியின் போது சுங்க இறக்குமதி வரியின் மீது 50 சதவீத மேலதிக வரியினை விதிப்பதற்கு முன்னதாக, வாகன இறக்குமதிக்கான கடன் பத்திரங்களை திறப்பதில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


ரூபாய்க்கு நிகரான டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக வாகனங்களின் விலையும் உயர்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், வாகன இறக்குமதியின் போது இவ்வாறு மேலதிக வரி விதிப்பதன் மூலம், வாகன விற்பனையாளர்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ள வாகனங்கள் மூலம் அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும் எனத் தெரிவித்தார்.


@CM

Tags

ads