நிந்தவூரைச் சேர்ந்த MI. Jowfer அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் உப பீடாதிபதி கடமையில் இருந்து நாளை 2026.05.22 ஆம் திகதி ஓய்வு பெறுகிறார்.
இவர் நிந்தவூர் நம்பிக்கையாளர் சபையின் தற்போதைய தலைவரும் அகில இலங்கை ஜம்மியத்தில் உலமா சபையின் நிந்தவூர் கிளையின் தற்போதைய பதில் தலைவராவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் காத்தான்குடி ஜாமிஆ பலாஹ் அரபுக் கல்லூரியின் பழைய மாணவரும் (1982-1990), இஸ்லாம் பாடத்தில் முதுகலைத் தகைமை (MA), கலைமாணி (BA Hons) ஆகியவற்றுடன் கல்வியில் முதுகலைப் பட்டயப்படிப்பு (PGDE) மற்றும் கல்வி முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு (PGDEM) ஆகியவற்றில் விசேட மற்றும் முதலாம் தரச் சித்திகளைப் பெற்று பல பட்டங்களை பெற்றுள்ளார்.
மேலும் அயர்லாந்தின் அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் பாடசாலைக் கல்வி தொடர்பான பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் (SLTES) முதலாம் தரத்தைப் பெற்றுள்ள இவர், சமூகத்திற்கும் கல்வித் துறைக்கும் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியதாகும்.
மேலும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் கல்வியியலாளராகப் பணியாற்றி வருகின்றார் என்பதுடன் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையில் 10 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது ஓய்வு காலம் சிறப்பாக அமைய சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
@CM
