Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாடளாவிய ரீதியில் 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் அறிகுறி!


நாடளாவிய ரீதியில் இதுவரை மொத்தம் 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


பதிவாகியுள்ள நோயாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு வைரஸ் மூலமான மூளைக்காய்ச்சல் என நம்பப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை தெனியாய, ரிகில்லகஸ்கட, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியத்தலாவ ஆகிய பிரதேசங்களிலிருந்தே நோய்த்தொற்றுக்குள்ளாகிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


இதன்படி நேற்று (31) வரையிலான நிலவரப்படி, இந்த நோய்த்தொற்று அறிகுறியுடன் 59 நோயாளர்கள் தற்பொழுது மருத்துவமனைகளில் தங்கிச் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையோர் முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வௌியேறியுள்ளனர்.


@CM

Tags

ads