Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வீசப்போகும் கடும் காற்று; 2.5 மீட்டர் வரை உயரப்போகும் அலைகள்!


நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடும் காற்று வீசுவதுடன், கடல் பகுதிகள் கணிசமான அளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  


இன்று முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அவசர அறிவிப்பு, நாளை முற்பகல் 10.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையிலான கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.  


இந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆகவே மறுஅறிவித்தல் வரும் வரை இந்த கடற்பரப்புகளுக்குள் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 


அத்துடன், திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீட்டர் (kmph) வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   


 இந்தக் கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக (Rough) காணப்படும். இப்பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுபடுபவர்களும் கடற்படையினரும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரையை ஒட்டிய கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 மீட்டர் முதல் 2.5 மீட்டர் (2.0 - 2.5m) வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. எனவே, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


@CM 

Tags

ads