லங்கா மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனம் பயணிகளின் வசதி மற்றும் அணுகுதன்மையை மேம்படுத்தும் நோக்கில், மாகும்புர - கொழும்பு மற்றும் மாகும்புர - கடவத்த ஆகிய வழித்தடங்களில் 8 புதிய நிறுத்தங்களை இணைத்து, இன்று (5) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய வழித்தட திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, மாகும்புர - கொழும்பு வழித்தடத்தில் கலல்கொட சந்தி, நைட்டா (NAITA - இராஜகிரிய), ஆயுர்வேத சந்தி மற்றும் ஹெட்ஜஸ் கோர்ட் (Hedges Court) ஆகிய புதிய நிறுத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேபோல், மாக்கும்புர - கடவத்த வழித்தடத்தில் தெல்கந்த, ஓரியன் சிட்டி - தெமட்டகொட, தோரண சந்தி மற்றும் மஹர சந்தி ஆகிய நிறுத்தங்கள் ஊடாக இனி சேவைகள் முன்னெடுக்கப்படும்.
வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் ஏனைய தேவைகளுக்காக தினமும் பயணிப்போரின் பயணச் சுமையை குறைப்பதோடு, முக்கிய நகர்ப்புறங்களுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதையே இந்த வழித்தட விரிவாக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
@CM
