Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாட்டில் அதிகரித்து செல்லும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!


நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர்.


அத்துடன், 35,228 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.


அந்தவகையில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் மருத்துவர் கபில கண்ணங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, 14 மாவட்டங்களில் உள்ள 72 சுகாதார மருத்துவ அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி, எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து, தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


@CM

Tags

ads