இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் பலத்த காற்றும் வீசுவதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மன்னார் ஊடாக காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரையான கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், முல்லைத்தீவு ஊடாக திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வரையான மற்றும் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக கற்பிட்டியிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளாகக்கூடிய கடல் பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், காலநிலை சீராகும் வரை ஆபத்தான கடல் பயணங்களைத் தவிர்க்குமாறும் சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
@CM
