மாற்றியமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற, வாகனங்களை அகற்றும் விசேட சோதனை!
சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மற்றும் குறைபாடுள்ள வாகனங்களை கண்டறியும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் கட்டமாக, அதிக ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், நாடு தழுவிய விசேட வாகனச் சோதனை நடவடிக்கைகளை காவல்துறை ஆரம்பித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நாடு முழுவதும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது
அத்துடன், அதிகக் கறுப்புப் புகையை வெளியிடும் மற்றும் வீதிப் பயன்பாட்டிற்குத் தகுதியற்ற வாகனங்களின்
உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
@CM
