Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நீர்க் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!


2026ஆம் ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


அதன்படி, வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு அதிக செலவு ஏற்படவில்லை என்றும், அதனால் கட்டண அதிகரிப்பு தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


வழக்கமாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீர் கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் நிலையில், இந்த வருடத்தின் முதல் பாதிக்காலத்திலும் கட்டண மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதேபோன்று, ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்திலும் கட்டண திருத்தம் இடம்பெற வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பாக, மின்சாரக் கட்டண அதிகரிப்பால் மாத்திரமே சில செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், அது நீர் கட்டணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.


இதனால் தற்போதைய நிலையில் நீர் கட்டணங்களில் மாற்றம் செய்யத் தேவையில்லை என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads