விசா விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவித்தல்
அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் குற்றப் பின்னணிகள் மற்றும் தவறான தகவல்களை வழங்கினால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறிய குற்றச் செயல்களாக இருந்தாலும் அவை விசா மறுப்புக்கு வழிவகுக்கும் என்றும், தூதரக அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களின் குற்றப் பின்னணி விபரங்கள் இருப்பதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் விண்ணப்பங்களின் போதும் நேர்காணல்களின் போதும் முழுமையான உண்மையை மட்டுமே வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொய்யான தகவல்களை அளித்தால் எதிர்காலப் பயணங்கள் நிரந்தரமாகத் தடை செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி விசா பெறுகின்ற முழுமையான நடைமுறையின் போதும் நேர்மையைக் கடைப்பிடிப்பது அவசியமானது என தூதரகம் தனது பொது அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது.
@CM
