Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரின் கல்விப் பெருமையை உயர்த்திய முஹம்மது இக்பால் பாத்திமா இஷாறா…

 


நிந்தவூர் மண்ணின் கல்விப் பெருமையை மேலும் உயர்த்தும் வகையில், முஹம்மது இக்பால் பாத்திமா இஷாறா அவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பான கல்விச் சாதனையுடன் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.


2000 ஆம் ஆண்டு எஸ். முஹம்மது இக்பால் மற்றும் யூ.எல். சித்தி ஜெசீலா ஆகியோரின் புதல்வியாகப் பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் கற்றதுடன், உயர்கல்வியை அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கற்றிருந்தார்.


தனது கல்விப் பயணத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற இவர், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் 3A பெறுபேறுகளுடன் மாவட்ட மட்டத்தில் 17ஆவது நிலையையும் பெற்றிருந்தார்.


பின்னர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தில் கணக்கியல் துறையில் (BBA Honours in Accounting) தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்து, முதலாம் தர (First Class) சிறப்புடன் நிறைவு செய்துள்ளார்.


2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், “Gold Medal for the Best Performance in Capital Market Subjects” எனும் உயரிய விருதைப் பெற்றுக்கொண்டார்.


இவ்விருதுக்கான அங்கீகாரமாக தங்கப் பதக்கம் மற்றும் ரூபா 70,600/- பெறுமதியான காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


இவ்விருது இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (Securities and Exchange Commission of Sri Lanka) மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் மூலம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கல்வி மீதான ஆர்வத்தின் மூலம் இந்த உயரிய சாதனையைப் பெற்றுள்ள பாத்திமா இஷாரா அவர்கள், தனது பெற்றோருக்கும் பிறந்த ஊரான நிந்தவூருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


இவரது சகோதரர் எம்.ஐ. முஹம்மது இன்பாஸ், BBA Honours in Marketing பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.


முஹம்மது இக்பால் பாத்திமா இஷாரா அவர்களின் கல்வி மற்றும் தொழில் ரீதியான சாதனைகள் மேலும் தொடரவும், எதிர்காலத்தில் பல உயரங்களை அடையவும் சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags

ads