இன்றைய இளைய தலைமுறையினர், குறிப்பாக 'Gen Z' பிரிவினர், பாரம்பரியமாக நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த "சொந்த வீடு மற்றும் சிற்றூந்து"என்ற இலக்குகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சிந்திப்பது சமூக ஆய்வாளர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.
முந்தைய தலைமுறையினர் வாழ்நாள் முழுவதையும் வங்கிக் கடன்களை அடைப்பதற்கும், சொத்துக்களைச் சேர்ப்பதற்கும் செலவிட்டனர்.
ஆனால், Gen Z தலைமுறையினர் "வாழ்க்கை என்பது அனுபவிப்பதற்கானது, கடனில் சிக்கித் தவிப்பதற்கானது அல்ல" என்ற மனநிலையைக் கொண்டுள்ளதாக அய்வுகளில் வெளியாகியுள்ளன.
இவர்களது முன்னுரிமைகளில் சொத்துக்களை விட, உலகைச் சுற்றிப் பார்ப்பது, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது மற்றும் மனநிறைவைத் தரும் அனுபவங்கள் முதலிடம் பிடிக்கின்றன.
இன்றைய இளைய தலைமுறையினர் பெரிய வீடுகளை விட 'குறைந்தபட்ச வாழ்க்கை' (Minimalism) முறையை விரும்புகின்றனர்.
பெரிய வீடுகளை பராமரிப்பது மற்றும் அதற்கான வரிகளைச் செலுத்துவதை விட, சிறிய ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது ஒற்றைப் படுக்கையறை கொண்ட வீடுகள் போதுமானதாகக் கருதப்படுகிறது.
வேலை மற்றும் சமூக வாழ்க்கையின் பொருட்டு, நகரின் மையப்பகுதிகளில் சிறிய இடங்களில் வசிப்பதையே இவர்கள் விரும்புகின்றனர்.
இது போக்குவரத்து நேரத்தைக் குறைப்பதுடன், சமூகத் தொடர்புகளை எளிதாக்குவதாக ஆய்வுகளில் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் இந்த மாற்றத்தை வெறுமனே 'விசித்திரமான மனநிலை' என்று கடந்துவிட முடியாது. இது மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப, இளைய தலைமுறை தங்களை மாற்றிக்கொள்ளும் ஒரு 'அடாப்டிவ் மெக்கானிசம்' (Adaptive Mechanism) ஆகும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
@CM
