நீர்ப் பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
தற்போது நிலவுகின்ற வரட்சியான காலநிலை காரணமாக நீரேந்தும் பகுதிகள் மற்றும் குளங்களின் நீர்மட்டம் கணிசமான அளவு குறைந்து செல்வதனால் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில் பாலமுனை, இறக்காமம், திருக்கோவில், பொத்துவில், நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, மற்றும் மந்திய முகாம் ஆகிய நீர் வழங்கல் திட்டக் காரியாலயங்களுக்குரிய பிரதேசங்களில் நீர் வழங்கலில் தடங்கள் ஏற்படும் என்பதனை அறியத்தருகின்றேன்.
எனவே, இந்நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை நீர்ப் பாவனையாளர்கள் நீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன் இதனால் ஏற்படுகின்ற அசௌகரியங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றேன்.
பிராந்திய முகாமையாளர்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அக்கரைப்பற்று
