நிந்தவூர் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆடுகள் திருடப்பட்டு வந்த நிலையில், இன்று பொதுமக்கள் சிலர் சந்தேகநபர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் BEW-5290 இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் பொதுமக்களால் கைப்பற்றப்பட்டு, நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், தப்பிச் சென்றவர்கள் ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால், நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
@CM
