கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் நான்கு கண்களுடன் காணப்பட்ட வித்தியாசமான தேங்காய் ஒன்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலக்காடு மாவட்டம், மண்ணம்பட்டா பகுதியைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரது வீட்டிலுள்ள தென்னை மரத்திலிருந்து பறிக்கப்பட்ட தேங்காய் ஒன்று, ஏனைய தேங்காய்களிலிருந்து வித்தியாசமாக காணப்பட்டுள்ளது.
குறித்த தேங்காயின் வெளிப்புறத்தில் நான்கு கண்கள் காணப்பட்டதுடன், அதனை உடைத்துப் பார்த்தபோது உட்புறத்தில் இரண்டு சிறிய தேங்காய்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்ட இந்த தேங்காயை பார்வையிட அப்பகுதி மக்கள் பலரும் அங்கு திரண்டதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நான்கு கண்களுடன் காணப்பட்ட இந்த தேங்காயின் நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது வைரலாகி வருகின்றன.
@CM
