iPhone பயனர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்துள்ள புதிய iOS 27 மென்பொருள் அப்டேட்டை அப்பிள் நிறுவனம் இன்று, இரவு (14) 10.30 மணிக்கு அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அப்டேட், iPhone 11 மற்றும் அதற்குப் பின்னர் வெளியான மொடல்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, iOS 27இல் இடம்பெறும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகள் மற்றும் புதிய தலைமுறை Siri 2.0 அம்சங்கள், iPhone 15 Pro மற்றும் அதற்குப் பின்னர் வெளியான மொடல்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய இயங்குதளத்தின் மூலம் Siri-யின் இடைமுகம் மேம்படுத்தப்படுவதுடன், பல்வேறு செயலிகளின் செயல்திறனிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், புதிய iOS 27 அப்டேட்டில் இடம்பெறவுள்ள வசதிகளைப் பயன்படுத்த iPhone பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
@CM
