Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட உண்மை நிலை!


சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் அதற்கேற்ப எரிபொருள் விலையை அதிகரிக்காததால், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


சில நிறுவனங்கள் சந்தைக்கு எரிபொருள் விநியோகிப்பதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.


எனினும், அடுத்த மூன்று மாதங்களுக்கு டீசல் லீற்றர் ஒன்றுக்கு 70 ரூபாய் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், தனியார் நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில், நாட்டில் குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பேணுமாறு உத்தரவிடும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு குறிப்பிட்டளவு எரிபொருளை விநியோகிக்குமாறு நிறுவனங்களுக்கு நேரடியாக உத்தரவிட முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்தநிலையில், சந்தையில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஊடாக வழக்கத்தை விட அதிகளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads