Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நாட்டின் இன்று பிற்பகல் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றங்கள்!



நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


மேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலி மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.


இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


@CM

Tags

ads