எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு!
மூவாயிரத்து 900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோகிராம் நிறையுடைய ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்கள் நேற்றையதினம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இன்று 85 ஆயிரம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தையில் நிலவும் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முழுமையாகத் தீர்க்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக எரிவாயு விநியோகம் இடம்பெறாமையே இந்தத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மூவாயிரத்து 800 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 20ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் நளிந்த குருகுலசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மூவாயிரத்து 500 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
@CM
