Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இன்று மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும்!


இலங்கைக்கு அருகில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள காரணத்தால், இன்று (20) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதன்படி, இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


மேலும், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அத்துடன், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads