Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம்: பல பகுதிகளில் கனமழைக்கு எச்சரிக்கை!


இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் நிலவும் தளம்பல் நிலையானது, அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கப் பிரதேசமாக உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன் தாக்கம் காரணமாக, இன்று (21) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அத்துடன், இலங்கையைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற்பகுதிகளிலும் மழை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பல பகுதிகளிலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பல பிரதேசங்களில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம்.


எனவே, இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads