இன்று முதல் 8 முக்கிய பணிகளுக்கு TIN இலக்கம் கட்டாயம்
வங்கி மற்றும் நிதி நடவடிக்கைகள் உட்பட 8 பொருளாதாரப் பணிகளுக்காக இன்று (01) முதல் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கைத் திறப்பது, மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்வது அல்லது மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடுகிறது.
18 வயது நிரம்பிய நபர்கள் TIN இலக்கத்தைப் பெறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், TIN இலக்கத்தைப் பெறுவதன் மூலம் அவர்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டியவர்கள் அல்ல எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று முதல் 18 வயது நிரம்பிய நபர்கள் ஏதேனும் ஒரு வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கைத் திறத்தல், கட்டிட வரைபடத்திற்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்தல் மற்றும் உரிமத்தைப் புதுப்பித்தல், காணி அல்லது காணியின் உரிமையைப் பதிவு செய்தல், வியாபாரத்தைப் பதிவு செய்தல், இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளை மாற்றுதல், கடன் அட்டை ஒன்றைப் பெறுதல் ஆகிய பணிகளுக்காக TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
18 வயது நிரம்பிய இந்த நாட்டுப் பிரஜைகளில் சுமார் 14 மில்லியன் பேர் இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுள்ளதுடன், இதுவரை TIN இலக்கத்தைப் பெறாத மக்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்திற்குச் சென்றோ அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இ-சேவை ஊடாகவோ அதற்காகப் பதிவுசெய்து கொள்ள முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
@CM
