Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபு கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்.


 நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு ஏற்பட்டிருந்த அதிபர் வெற்றிடத்திற்கு நிந்தவூரைச் சேர்ந்த மௌலவி A.சம்சுத்தீன் (ஹாமி) அவர்கள் அதிபராக கல்லூரியின் நிர்வாக சபையினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.


1970.07.04ம் திகதி பிறந்த மௌலவி A. சம்சுதீன் (ஹாமி) தனது ஆரம்பக் கல்வியை நிந்தவூர் கமு/கமு மினா வித்தியாலயத்தில் பயின்றதுடன் 1981ம் ஆண்டு காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதன்மையான மாணவர்களில் ஒருவராவார்.


 தனக்கு ஆரம்ப ஆன்மீக கல்வியை போதித்த கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்பட்டிருப்பது சிறப்பம்சத்திற்குரியதாகும்.


அதன்பின்னர் தன்னுடைய மார்க்க கல்விக்காக கல்முனை ஹாமியா அரபுக் கல்லூரியில் இணைந்து கொண்ட அவர்கள் 1990 ஆம் ஆண்டு ஆலிமாக பட்டம் பெற்று வெளியேறினார்கள்.


அக்குரனையில் திருமணம் முடித்து தற்போது நிந்தவூரில் நிரந்தரமாக வசித்து வரும் இவர்கள், சுமார் 20 வருடங்கள் ஆன்மீக கல்வியில் கற்றல் கற்பித்தலில் பூரண அனுபவம் கொண்டவரும், சிறந்த நிருவாகியுமாவார்.


புதிய அதிபரை வரவேற்பதுடன் எமது கல்லூரி பல்வேறு சாதனைகளை இவருடைய காலத்தில் புரிய வேண்டும் என எதிர்பார்த்து வாழ்த்துகின்றோம்.

Tags

ads