Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சர்வதேச_புகைத்தல் மது எதிர்ப்பு தினம் மே 31

"புகைத்தலிலிருந்து மீண்ட ஒரு கிராமம் மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் தேசம்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தின பிரதான நிகழ்வு இன்று 2023.05.31 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரனி ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிந்தவூர் பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.சி.அன்வர் தலைமையில் நடைபெற்றது.


 இந்நிகழ்வில் பிரதம அதீதியாக உதவிப் பிரதேச செயலாளர் T.ஜெஸான் அவர்களும் விசேட அதீதியாகவும் வளவாளராகவும் நிந்தவூர் சுகாதர வைத்திய அதிகாரி வைத்தியர் ரயிஸ் அவர்களும் கலந்துகொண்டதுடன் ஏனைய அதீதிகளாக நிந்தவூர்பிரதேச செயலக கணக்காளர்,திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர்,கிராம நிலதாரி நிர்வாக உத்தியோகத்தர்,சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர்,திட்டமுகாமையாளர்,சமுர்த்தி சமுதாய அடிப்படை விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள்,வெளிக்கள உத்தியோகத்தர்கள்,நிந்தவூர்-11 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்புகளின் பிரதி நிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


 இந்நிகழ்வில் புகைத்தல் மற்றும்போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடாத்தப்பட்டதுடன் புகைத்தல் மற்றும்போதைப்பொருள் கொடி விற்பனை நிகழ்வும் இடம் பெற்றன.


அத்துடன் மேற்படிநிகழ்வுகள் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்க விடயமாகும்.

Tags

ads