Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ஒவ்வோரு ஆண்டும் 900 புற்றுநோயால் பாதிப்பு.

ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் , மேலும் குறைந்தது 100 குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்.,
“ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அறிவிக்கப்படாத இந்த புள்ளிவிவரங்களுக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன”ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் அதாவது, உடனடி உணவுகள், உலர் உணவுப்பயன்பாடு, அதிகரித்த கைப்பேசி ப் பாவனை  விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடாமை என்பன இவ்வாறான காரணிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நமது குழந்தைகளைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவதோடு , துரித உணவுகளைத் தவிர்த்துமற்றும் உடல் செயற்பாடுகளை அதிகரிப்பது முக்கியம்” என்றும் அவர்  மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கான பொறுப்பு வைத்தியர்களான எங்களுக்கு உள்ளதைப் போல பெற்றோர்களாகிய உங்கள் கையிலும் உள்ளது என்பதை அனைவரும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



Tags

ads