Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நீதிமன்ற பகிஷ்கரிப்பு


முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு பாராளுமன்றத்தில் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவர்களால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக வட கிழக்கு மாகாணங்களில் உள்ள சட்டத்தரணிகள் யாவரும் இன்றைய தினம் முழுமையான நீதிமன்ற  பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் இன்றைய தினம் 11.07.2023 வடகிழக்கிலுள்ள சகல நீதிமன்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக கிழக்கு மாகாணங்களில் உள்ள கல்முனை,சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் உள்ள உள்ள சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரித்திருந்தனர்.


குறிப்பாக சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கமும் இதற்கான கண்டனத்தை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளதுடன் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிடுகின்ற சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துகின்ற நீதிமன்றங்கள் மீதும், அதனை செயல்படுத்துகின்ற நீதிபதிகள் மீதும் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற யாராக இருந்தாலும் அது நீதித்துறையின்  சுயாதீனத்தை முழுமையாக பாதிக்கும் என்றும் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் சாதாரண பிரஜைகளுக்கும் நீதிமன்றின் சுயாதீன தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துவிடும் என்று சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் தமது கண்டனத்தை வெளிப்படுத்துகின்றது


ஊடகப்பிரிவு

தலைவர்

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம்

ads