Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வெளிநாட்டு விசாவுக்கு இலங்கையில் நடக்கும் பாரிய மோசடி!

 

நாட்டின் சில நிறுவனங்களும் தனிநபர்களும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான போலி ஆவணங்களை தயாரித்து பல்வேறு திணைக்களங்களுக்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய திணைக்களம் தெரிவித்துள்ளது.


விசா பெற, நிரந்தர வேலை அல்லது பணி அனுபவத்தை உறுதிப்படுத்த, வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, ​​அத்துடன் பல்வேறு அரசு, அரை-அரசு மற்றும் சட்டரீதியான கொள்முதல் நடைமுறைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, பணி அனுபவம் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை போன்ற உண்மைகளை உறுதிப்படுத்தவும் இந்த போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


போலியான ஆவணம்

ஊழியர் சேமலாப நிதி தொடர்பான போலியான ஆவணங்களை தயாரித்தல் சட்டவிரோதமான செயற்பாடாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே பொதுமக்களும் ஏனைய அனைத்து நிறுவனங்களும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என நிதி திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags

ads