Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கல்முனையில் "சிசுபல சமாஜ சத்காரய" வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம்


 அனைவருக்கும் சமமான கல்வியை வழங்கும் நோக்கில் சமுர்த்தி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட "சிசுபல சமாஜ சத்காரய"வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்முனை சமுர்த்தி மகா சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனைப் பிரதேச செயலகப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட345 மாணவர்களுக்கு இலவச பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு கல்முனைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை(09)மகாசங்க முகாமையாளர் எம்.எம்.எம்.நௌசாத் தலைமையில் நடைபெற்றது. 


( கல்முனை நிருபர்) 


 இந்நிகழ்வில் கல்முனைப் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி பிரதம அதிதியாகவும்,சிரேஷ்ட தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர். எம்.சாலிஹ் கௌரவ அதிதியாகவும்,விசேட அதிதிகளாக சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான எஸ்.எஸ்.பரீரா,

ஏ.எம்.பைசால்,யூ.கே.சிறாஜ் ஆகியோர்கள் கலந்துகொண்டதுடன்,அதிதிகளாக வலய உதவி முகாமையாளர்கள் மற்றும் பிரிவுகளுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுதாய அடிப்படை அமைப்பின் பிரதிநிதிகள்,மாணவர்கள்,பொதுமக்கள் 

எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags

ads