நாட்டில் டெங்கு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் டெங்கு பெருகும் வலயங்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே வீடுகள் மட்டுமின்றி பொது இடங்களிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் டெங்கு பரவும் இடங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
