Type Here to Get Search Results !
Developed by Cleverbit

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி.

 


நாம் கடந்த இரு வருடங்களில் எதிர்கொண்டிருந்த இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தமது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் நாட்டிற்காகவும், சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் எனவும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் சுபீட்சத்தின் தீபங்களை ஏற்றி, இலங்கையை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும், பல்லின மக்களுக்கு மத்தியில் சமாதானம், சகவாழ்வு, நல்லிணக்கத்துடன் கூடிய ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த தீபாவளி பண்டிகை வரப்பிரசாதமாக அமைய வேண்டும்.


இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் இருளை அகற்றி ஒளி பிறக்க வாழ்த்துவதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


Tags

ads