Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மீனவர்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் விரைவில் கிடைக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசல் காசிம் அவர்களின் நம்பிக்கை தரும் முன்னெடுப்புக்கள்



நேற்று (14) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களினால் ஏற்கனவே கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட மீனவர்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளுக்கான முன்னெடுப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு, அவற்றுக்கான தீர்வுகளை விரைவில் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கையினையும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் சபை முன் முன்வைத்திருந்தார்.


அதன் அடிப்படையில்,

1. கழுவாஞ்சிகுடி தேத்தாத்தீவு பிரதேசத்தில் மீன்பிடி வலைகள் வெட்டப்பட்டு மீன்கள் எடுத்துச் செல்லப்பட்ட பிரச்சினைக்கான தீர்வு மற்றும் முன்னெடுப்புகள் 


2. கல்முனை ரேடியோ நிலையத்தை மீள தாபித்தல் தொடர்பிலான தீர்வு மற்றும் முன்னெடுப்புகள்


3.வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் புதிய இறங்கு துறை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவு


4. கடலரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிந்தவூர், மாளிகைகாடு, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் மீனவர்கள் தங்கள் அன்றாட தொழில் முன்னெடுப்புகளை செய்வதில் எதிர்நோக்குகின்ற சிரமங்களை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கள விஜயம் ஒன்றின் மூலம் பார்வையிடுவதற்கான கோரிக்கை


போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தது.


இவை தொடர்பில் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விரைவில் தீர்வுகள் கிடைக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசல் காசிம் அவர்களின் நம்பிக்கை தரும் முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags

ads