Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் ஆதார வைத்திய சாலையின் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு கருத்தரங்கும் உணவுப் பொருள் கண்காட்சியும்.


 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் ILM றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைவாக உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நிந்தவூர்  ஆதார வைத்தியசாலையின் இரண்டாம் நாள் நிகழ்வாக உணவுக்கண்காட்சியும் கருத்தரங்கும்  இன்று இடம் பெற்றது. 


நிந்தவூர் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் M.B அப்துல் வாஜித் தலைமையில்   விழிப்புணர்வு உணவுக்கண்காட்சியும் , கருத்தரங்கும் நடைபெற்றது. இதில் உரையாற்றிய வைத்திய அத்தியட்சகர் Dr அப்துல் வாஜித் அவர்கள் கிளினிக் பயனாளிகள் திருப்திகரமான சேவையை பெற்றுக்கொள்வதற்கான செயற்திட்டத்தை செயற்படுத்திவருவதாக தெரிவித்தார்.

மேலும் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் 

Dr M.N.M யூசுப் அவர்கள் நீரிழிவு நோயாளர்கள் சீனியின் அளவை  கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டிய வழிவகைகள் பற்றி விரிவுரையாற்றினார்.


பின்னர் இடம் பெற்ற விழிப்புணர்வு உணவுக்கண்காட்சி நிகழ்வில் கிளினிக் பயனாளிகளுக்கு தாதிய மேற்பார்வையாளர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களினால் அன்றாடம் உட்கொள்ளக்கூடிய, உட்கொள்ள கூடாத உணவு முறைகள் பற்றி விபரித்து விளக்கமளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் நிந்தவூர்சுகாதார வைத்திய அதிகாரி ,

வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்கள், கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

"ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள் ஆனந்தமாக வாழுங்கள்"

Tags

ads