Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

சர்வதேச மனக்கணிதப் போட்டியில் நிந்தவூர் சிறுவன் மலேசியாவில் சாதனை

 


சிடிசன் மீடியா



2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக்கணித போட்டி இடம்பெற்றது. இப்போட்டியில் உலகளாவிய ரீதியில் 80இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2500 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 62 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இலங்கைக்கு Champion, 2nd,3rd  போன்ற இடங்கள் கிடைக்கப்பெற்றன.


இதில் Nintavur UCMAS இலிருந்து  ஒரே ஒரு மாணவன் A.A.R.A.Akeesh, Visual Competition E Category இல் போட்டியிட்டு 3ம் இடத்தை பெற்றுக் கொண்டத்துடன் Flash Competition  இல் Merit Certificate இனையும் பெற்றுக் கொண்டார்.


 கடந்த ஆகஸ்ட் மாதம் BMICH இல் இடம் பெற்ற National Competition இல் Champion இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Nintavur UCMAS, வரலாற்றில் இரண்டாவது தடவையாக சர்வதேச போட்டிக்கு மாணவர்களை பங்குபற்ற செய்து திறமைகளை வெளிக்காட்ட செய்துள்ளது. மேலும் பல வெற்றிகள் பெற்று சாதனைகள் படைக்க வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

ads