Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கல்முனை கல்வி வலய ஆரம்ப பிரிவு வளவாளராக ஆசிரியர் I.L.A. றகுமான் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


 கல்முனை கல்வி வலய ஆரம்ப பிரிவு வளவாளராக ஆசிரியர் I.L.A. றகுமான் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார். 


ஆரம்ப பிரிவிற்கு ஏற்பட்ட வெற்றிடத்தினை நிரப்பும் முகமாக கடந்த மாதம் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற ஆசிரியர் சேவை தரம் 1 யை சேர்ந்த கமு/அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஆரம்ப பிரிவிற்கு பொறுப்பான ஆசிரியர் I.L.A. றகுமான் பெற்றதை அடுத்து மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதற்க்கான உத்தியோக பூர்வ கடிதத்தினை கையளிக்கும் நிகழ்வு இன்று கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய எம். எஸ். சஹுதுல் நஜீம் சேர் அவர்களது கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம் ஜாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


I.L.A. றகுமான் ஆசிரியர் அவர்களுக்கு (சிட்டிசன் ஊடக) வலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

ads