Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகயீனமுற்று உயிரிழப்பு


 தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகயீனமுற்று உயிரிழப்பு


பொலன்னறுவை, புலஸ்திபுர பிரதேசத்தில் வாக்கெடுப்பு நிலையத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.


எச்.எம் இரத்னபால என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவர் புலஸ்திபுர பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுகயீனமுற்றுள்ள நிலையில் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

ads