Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் தேசிய பாடசாலை Band வாத்திய குழு மாணவர்கள் வரலாற்று சாதனை



நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் தேசிய பாடசாலை Band வாத்தியக் குழுப் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை...!


கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையில் ஆண், பெண் இரு பாலாருக்குமான Band வாத்திய குழுப் போட்டி 2024.10.29ஆம் திகதி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 


இப்போட்டியில் பெண்கள் பிரிவில் நிந்தவூர் கமு/கமு/அல் - மஸ்ஹர் பெண்கள் தேசிய பாடசாலையின் Band வாத்தியக் குழு கல்முனை வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.  


இப்போட்டியில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜாபீர், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.முதரீஸ் உட்பட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


இப்போட்டியில் மாணவிகள் வெற்றி பெறுவதற்கு பக்கபலமாக இருந்த ஆசிரியர் பி.கமால்தீன், அவருக்கு உதவியாக செயற்பட்ட ஆசிரியர் இஸட்.அக்கீல் ஆகியோர்களுக்கும், Band வாத்தியக் குழுவின் மாணவிகள், மற்றும் பாடசாலையின் அதிபர் ஏ.சி.ஹாமிது உள்ளிட்ட பாடசாலை சமூகம் சார்பாக தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.


2015ஆம் ஆண்டு அப்போதைய மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இப் பாடசாலையில் Band வாத்திய குழு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ads